மே தின கொண்டாட்டங்களில் பொலித்தீன் பாவனைக்கு தடை

மே தின கொண்டாட்டங்களில் பொலித்தீன் பாவனைக்கு தடை

by Staff Writer 06-05-2018 | 4:02 PM
COLOMBO (News 1st) தொழிலாளர் தின கொண்டாட்டங்களில் பொலித்தீன் பாவனையை தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. கொண்டாட்டங்களின் போது, பொலித்தீன் பாவனை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். இது குறித்து இரவு நேரங்களில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாளைய தினம் நடைபெறவுள்ள தொழிலாளர் தின கொண்டாட்டங்களில் குறிப்பாக பேரணிகளில், கூட்டங்களின் போதும் பொலித்தீன் பாவனையை தவிர்க்குமாறு அரசியல் கட்சிகள், ஏற்பாட்டாளர்களிடம் மத்திய சுற்றாடல் அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.