கோனவலப்பத்தனையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

கோனவலப்பத்தனையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

கோனவலப்பத்தனையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

06 May, 2018 | 4:10 pm

COLOMBO (News 1st) நாவலப்பிட்டி – கோனவலப்பத்தனை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு பெய்த பலத்த மழையினை அடுத்து, மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் 20 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதுடன், குறித்த இளைஞனின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்