ஒன்பது வருடங்களின் பின்னர் லெபனானில் இன்று பாராளுமன்ற தேர்தல்

ஒன்பது வருடங்களின் பின்னர் லெபனானில் இன்று பாராளுமன்ற தேர்தல்

ஒன்பது வருடங்களின் பின்னர் லெபனானில் இன்று பாராளுமன்ற தேர்தல்

எழுத்தாளர் Staff Writer

06 May, 2018 | 4:18 pm

COLOMBO (News 1st) 9 ஆண்டுகளுக்கு பின்னர் லெபனானில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது.

லெபனானில் இறுதியாக 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

அதன்பின்னர், பிராந்திய அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இரண்டு தடவைகள் பாராளுமன்றம் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் 128 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பமானதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவுகள் இன்று இரவு அல்லது நாளை வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்வேறு மாற்றங்களுடன் இம்முறை தேர்தல் நடத்தப்படுவதாக அந்நாட்டு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்களும் வாக்களிக்கும் வசதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்