6000 பெண்களை நிராகரித்த பிரபாஸ் இரண்டாம் இடத்தில்

6000 பெண்களை நிராகரித்த பிரபாஸ் இரண்டாம் இடத்தில்

6000 பெண்களை நிராகரித்த பிரபாஸ் இரண்டாம் இடத்தில்

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2018 | 7:07 pm

இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க ஆண்களின் பட்டியலில் 6000 பெண்களை நிராகரித்த நடிகர் பிரபாஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தியத் திரைப்படம் பாகுபலி மற்றும் பாகுபலி-2.

இந்த படத்தின் கதாநாயகனாக நடித்த பிரபாஸ் உலகப் புகழ்பெற்றார். அதைத்தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது மிகவும் பரபரப்பான நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

மேலும், இவருக்கு பல்வேறு காதல் விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் உள்ளன. பாகுபலி படப்பிடிப்பில் மட்டுமே சுமார் 6,000 காதல் விண்ணப்பங்களை பிரபாஸ் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் பிரபல நாளிதழ் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்திய அளவில் அனைத்து தரப்பினராலும் மிகவும் விரும்பத்தக்க ஆண்களின் பட்டியலில் நடிகர் பிரபாஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

முதல் இடத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் உள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்