ஹவாய் தீவில் நிலநடுக்கம்: கீலவேயா எரிமலை சீற்றம்

ஹவாய் தீவில் நிலநடுக்கம்: கீலவேயா எரிமலை சீற்றம்

by Bella Dalima 05-05-2018 | 6:06 PM
அமெரிக்காவின் ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கீலவேயா எரிமலை சீற்றம் கொள்ளத் தொடங்கியுள்ளது. முன்னதாக கீலவேயா எரிமலை வெடிப்பு காரணமாக அருகில் குடியிருக்கும் சுமார் 1,700 பேர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.