லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் விருது கண்டுபிடிப்பு

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமற்போயிருந்த வௌ்ளி விருது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

by Bella Dalima 05-05-2018 | 4:50 PM
Colombo (News 1st)  பிரபல திரைப்பட இயக்குனர் காலஞ்சென்ற லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரியைகளின் போது காணாமற்போன வெள்ளி விருது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற திரைப்பட விருது விழா ஒன்றின் போது, சினிமாத்துறைக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸூக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருந்தது. இந்த விருது அன்னாரின் பூதவுடலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்ததுடன், இறுதிக்கிரியைகளின் போது காணாமற்போயிருந்தது. காணாமற்போன பதக்கத்தைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடுவளைக்கும் கொள்ளுப்பிட்டிக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றிலிருந்து இந்த விருது இன்று முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.