ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2018 | 6:53 pm

மாஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகை அருகே இன்று போராட்டம் நடத்தச்சென்ற ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே, பொதுமக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவல்னி வலியுறுத்தி வருகிறார்.

இந்த கருத்தை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுமாறு தனது கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகை அருகே இன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற அலெக்சி நவல்னி-யை புஷ்கின்ஸ்கயா சதுக்கம் அருகே பொலிஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்துள்ளனர்.

இந்த தகவலை அலெக்சி நவல்னியின் நண்பரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான லியோனிட் வால்கோவ் சமூக வலைத்தளத்தின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்