பணிப்பாளர் சபை நியமிக்கப்படாமையால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நடவடிக்கைகள் பாதிப்பு

பணிப்பாளர் சபை நியமிக்கப்படாமையால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நடவடிக்கைகள் பாதிப்பு

பணிப்பாளர் சபை நியமிக்கப்படாமையால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நடவடிக்கைகள் பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2018 | 4:02 pm

Colombo (News 1st) 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்பாளர் சபை நியமிக்கப்படாமையால் அதிகார சபையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 9 ஆம் திகதியுடன் அதிகார சபையின் பணிப்பாளர் சபைக்கான பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.

இதேவேளை, பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரும் பல மாதங்களாக பணிப்பாளர் சபை கூடவில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அதிகார சபையின் தலைவர் எச்.எம். அபேரத்னவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் தெரிவு செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர்களை ஜனாதிபதி பெயரிடுவார் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எச்.எம். அபேரத்ன சுட்டிக்காட்டினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்