நீர்கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

நீர்கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

நீர்கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2018 | 4:59 pm

Colombo (News 1st) 

நீர்கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மீனவர் சங்கத் தலைவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பில் எதுவிதத் தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீர்கொழும்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்