திருகோணமலையில் இளம்பெண் கத்தரிக்கோலால் குத்திக் கொலை

திருகோணமலையில் இளம்பெண் கத்தரிக்கோலால் குத்திக் கொலை

திருகோணமலையில் இளம்பெண் கத்தரிக்கோலால் குத்திக் கொலை

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2018 | 4:41 pm

Colombo (News 1st) 

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் இளம்பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கத்தரிக்கோலால் குத்தி இன்று அதிகாலை இந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

26 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாக கொலை இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை தலைமையக பொலிஸார் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்