காங்கேசன்துறை சந்தியிலிருந்து கீரிமலை வரையான பகுதியை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை

காங்கேசன்துறை சந்தியிலிருந்து கீரிமலை வரையான பகுதியை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை

காங்கேசன்துறை சந்தியிலிருந்து கீரிமலை வரையான பகுதியை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2018 | 8:21 pm

Colombo (News 1st) 

யாழ். பருத்தித்துறை – பொன்னாலை வீதியின் காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான பகுதியை விரைவில் விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருத்தித்துறை – மயிலிட்டி ஊடான பொன்னாலை வீதி ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை இந்த வீதியை மக்கள் பயன்படுத்த முடியும் என அன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

எனினும், இந்த வீதியின் காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான பகுதி விடுவிக்கப்படாதுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.

இந்த பகுதியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கிருஷ்ணர் ஆலயமொன்றும் மக்களின் காணிகளும் விடுவிக்கப்படாதுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான பகுதி மற்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

எவ்வாறாயினும், காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான வீதியை விடுவிப்பதற்கான தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்