இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பிய 14 பேர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பிய 14 பேர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாடு திரும்பிய 14 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

05 May, 2018 | 3:40 pm

Colombo (News 1st) 

சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டிற்கு வருகை தந்த 14 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 8 மாதம் நிரம்பிய இரண்டு சிசுக்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

7 ஆண்களும் 3 பெண்களும் 2 சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு தேவையான முதலுதவிகளை வழங்கியதன் பின்னர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இவர்கள் நாட்டிற்கு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யுத்தகாலத்தில் இங்கிருந்து இந்தியாவிற்கு சென்றவர்களே இவ்வாறு நாட்டிற்கு சட்டவிரோதமாக திரும்பி வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காங்கேசன்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்