by Bella Dalima 04-05-2018 | 6:36 PM
அமெரிக்காவின் ஒஸ்கார் நிறுவகத்திலிருந்து அதன் உறுப்பினர்களான பில் காஸ்பி (Bill Cosby ) மற்றும் ரோமன் பொலன்ஸ்கி (Roman Polanski) ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
நிறுவகத்தின் நடத்தை விதிமுறைகளின் பிரகாரம், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நட்சத்திரமான Bill Cosby கடந்த மாதம் பாலியல் வழக்கொன்றில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
1977 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமையை Bill Cosby ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கை தொடர்பில் கொஸ்பி மற்றும் பொலன்ஸ்கி ஆகியோர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.