ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனம்

ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனம்

ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனம்

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2018 | 6:55 pm

அமெரிக்காவின் ஹவாய் தீவில் எரிமலை சீற்றம் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த பகுதியிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.

எரிமலை சீற்றம் காரணமாக ஹவாயின் பல பகுதிகளிலும் அண்மைக்காலங்களில் 12 நில அதிர்வுகள் பதிவாகியதாக அமெரிக்க புவிச்சரிதவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் குடியிருப்பு தொகுதிகளில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களை வௌியேற்றும் பணிகளில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்