வர்த்தமானி வௌியீட்டின் பின்னர் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேருக்கும் எதிர்க்கட்சியில் ஆசனம் ஒதுக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2018 | 4:25 pm

Colombo (News 1st) 

அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி வௌியானதன் பின்னர் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேருக்கும் எதிர்க்கட்சியில் ஆசனத்தை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விலகியவர்களில் 6 பேர் அமைச்சர்களாவர். அவர்களின் இராஜினாமாவிற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளதால் அவர்களுக்கான எதிர்க்கட்சி ஆசனம் ஒழுங்கு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இராஜினாமா செய்த பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பெயர்ப்பட்டியல் வர்த்தமானியில் வௌியிடப்படவில்லை.

இதன் காரணமாக அவர்களுக்கு எதிர்க்கட்சியில் ஆசனத்தை ஒதுக்குவதற்கு தீர்மானம் எட்டப்படவில்லை என அரசின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

வர்த்தமானியை வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்