பால் மாவின் விலை 50 ரூபாவால் அதிகரிப்பு

பால் மாவின் விலை 50 ரூபாவால் அதிகரிப்பு

பால் மாவின் விலை 50 ரூபாவால் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2018 | 3:34 pm

Colombo (News 1st) 

ஒரு கிலோகிராம் நிறையுடைய பால் மாவின் விலை 50 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

வாழ்கைச்செலவு குழுவின் பரிந்துரைக்கு அமைய பால் மா நிறுவனங்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், சிறுவர்களுக்கான பால் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

மே மாதம் 5 ஆம் திகதி முதல் பொதியிடப்படும் பால் மா பக்கெட்களுக்கே இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, 400 கிராம் நிறையுடைய பால் மா பக்கெட் ஒன்றின் விலையை 20 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவுக்கான குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் கலந்துரையாடவுள்ளதாக வாழ்க்கைச் செலவுக்கான குழுவின் உறுப்பினர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்