பரந்தனில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்

பரந்தனில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்

பரந்தனில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2018 | 4:35 pm

Colombo (News 1st) 

கிளிநொச்சி – பரந்தன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரும் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதல் மேற்கொண்டவரின் மனைவியும் குறித்த பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

அதிபருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்