திருமணத்தை உடனடியாக நிறுத்திவிடுங்கள்: இளவரசர் ஹரிக்கு மேர்க்கலின் சகோதரர் கடிதம்

திருமணத்தை உடனடியாக நிறுத்திவிடுங்கள்: இளவரசர் ஹரிக்கு மேர்க்கலின் சகோதரர் கடிதம்

திருமணத்தை உடனடியாக நிறுத்திவிடுங்கள்: இளவரசர் ஹரிக்கு மேர்க்கலின் சகோதரர் கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2018 | 7:29 pm

மேர்க்கலுடனான திருமணத்தை உடனடியாக நிறுத்திவிடுங்கள் என இளவரசர் ஹரிக்கு மேர்க்கலின் சகோதரர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் மேர்க்கல் பற்றி எழுதியுள்ள விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஏற்கனவே திருமணம் ஆனவரான மேர்க்கல், இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற செய்தி வெளியான நாளில் இருந்து, மேர்க்கலின் குடும்பத்தார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மே 19 ஆம் திகதி ஹரி – மேர்க்கல் திருமணம் நடைபெறவுள்ளது.

திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்ற நிலையில், மேர்க்கலின் சகோதரர் தாமஸ், இளவரசர் ஹரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்,

நடக்கவிருக்கும் உங்களது திருமணத்தை நிறுத்திவிடுங்கள். மேர்க்கல் வாழ்க்கையில் ஆழமில்லாத பெண். மேலும், அதிகமாக கற்பனையில் வாழ்பவள். அவளைப்பற்றி உலகமே அறிந்து கொண்டிருக்கையில், நீங்கள் மட்டும் ஏன் மேர்க்கலின் சுயரூபத்தை அறிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள். அவள் உங்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதவள். இந்த திருமணம், இங்கிலாந்து அரச குடும்ப திருமண வரலாற்றில் மிகப்பெரிய தவறு

என எழுதியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்