க.பொ.த உயர்தர பரீட்சைக்கான மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் வௌியிடப்படவுள்ளன

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் வௌியிடப்படவுள்ளன

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் வௌியிடப்படவுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2018 | 3:43 pm

Colombo (News 1st) 

2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான மீள்பரிசீலனை பெறுபேறுகள் இரண்டு நாட்களில் வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளின் மதிப்பீட்டு நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித குறிப்பிட்டார்.

புதிய வெட்டுப்புள்ளிகளுடன் பெறுபேறுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

60,332 பேர் இம்முறை பரீட்சை மீளாய்விற்கு விண்ணப்பித்திருத்தனர்.

அதற்கமைய, மீளாய்வு செய்யப்பட்ட புதிய பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு தினங்களில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்