கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலையில் நாளை கடும் வெப்பத்துடன் கூடிய வானிலை நிலவும்

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலையில் நாளை கடும் வெப்பத்துடன் கூடிய வானிலை நிலவும்

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலையில் நாளை கடும் வெப்பத்துடன் கூடிய வானிலை நிலவும்

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2018 | 3:52 pm

Colombo (News 1st) 

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நாளை கடும் வெப்பத்துடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் குறித்த மாவட்ட மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டரிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 7 ஆம் திகதி காலை வரை மழையுடனான வானிலை சில பகுதிகளில் நீடிக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்