கடவுச்சொல்லை உடனடியாக மாற்றுமாறு பயனாளர்களிடம் ட்விட்டர் கோரிக்கை

கடவுச்சொல்லை உடனடியாக மாற்றுமாறு பயனாளர்களிடம் ட்விட்டர் கோரிக்கை

கடவுச்சொல்லை உடனடியாக மாற்றுமாறு பயனாளர்களிடம் ட்விட்டர் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

04 May, 2018 | 5:02 pm

தமது கணக்குகளுக்கான கடவுச்சொல்லை உடனடியாக மாற்றுமாறு ட்விட்டர் நிறுவனம் பயனாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சில உறுப்பினர்களால் கணக்குரிமையாளர்களின் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளமையும் முறைகேடாகப் பயன்டுத்தப்படுகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளதாக ட்விட்டர் தளம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கணக்குரிமையாளர்கள் தமது கடவுச்சொற்களை உடனடியாக மாற்றுமாறு ட்விட்டர் வலியுறுத்தியுள்ளது.

சுமார் 330 மில்லியன் பயனாளர்களைக் கொண்ட ட்விட்டர் தளமானது பாதிக்கப்பட்ட பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தரவுகளை வௌியிடவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், பல மாதங்களாக கணக்குகள் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்