புழுதிப் புயலில் சிக்கி இறந்தோர் 127 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் புழுதிப் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 04-05-2018 | 5:13 PM
இந்தியாவின் வட மாநிலங்களில் புழுதிப் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்வடைந்துள்ளது. ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை நேற்று முன்தினம் (02) இரவு புழுதிப் புயல் திடீரெனத் தாக்கியது. இந்த புயலுடனான மழை காரணமாக ஏராளமான வீடுகள் தரைமட்டமாகியதுடன் மின்கம்பங்களும் ஆங்காங்கே சரிந்து வீழ்ந்துள்ளன. உத்தர பிரதேசத்தில் இடியுடன் கூடிய கடும் காற்றுடனான வானிலை நாளை வரை நீடிக்குமென இந்திய இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, 60 வீதத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக மாநிலத்தின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.