by Bella Dalima 03-05-2018 | 10:55 PM
Colombo (News 1st)
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரி மற்றும் அரச கூட்டுத்தாபனத் தலைவர் ஆகியோரின் பணியை உடனடியாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
எந்தவொரு தயக்கமும் இன்றி குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு
சகல பிரிவுகளுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் மோசடிக்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை நடைமுறைப்படுத்தல் மற்றும் சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுவதன் அவசியம் இதனூடாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.