வட கொரிய அதிபரை நம்பும் தென் கொரிய மக்கள்

வட கொரிய அதிபரை நம்பும் தென் கொரிய மக்கள்

by Bella Dalima 03-05-2018 | 4:55 PM
கொரிய அதிபர்களின் சந்திப்பிற்கு பின்னர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீது தென் கொரிய மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவொன்றில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. ஏப்ரல் 27 ஆம் திகதி வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜீ இன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். பல காலமாக தொடர்ந்து இருந்து வந்த பகைக்கு இடையே இவர்களின் இந்த சந்திப்பு உலக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இதையடுத்து, வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தற்போது தென் கொரிய மக்களால் அதிகளவில் நம்பப்படுவதாக அந்நாட்டு ஊடகம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. தென் கொரியா முழுவதும் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பின் முடிவில் 78 சதவீத மக்கள் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக 17 சதவீத மக்கள் அதீத நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். அதுபோல இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாக 89 சதவீத மக்கள் நம்பிக்கை தெரிவித்ததாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.