பெரியவெங்காயம், கிழங்கின் இறக்குமதி வரி அதிகரிப்பு

பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

by Bella Dalima 03-05-2018 | 5:39 PM
Colombo (News 1st)  இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி 40 ரூபா வரை அதிகரிப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான விலை குறைவடைந்துள்ளதுடன், உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது. அதற்கமைய, ஒரு ரூபாவாகக் காணப்பட்ட பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 ரூபாவாகக் காணப்பட்ட உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.