அவுஸ்திரேலியாவின் பயிற்றுவிப்பாளராக ஜஸ்டின் லங்கர்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஜஸ்டின் லங்கர் நியமனம்

by Staff Writer 03-05-2018 | 9:23 AM
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஜஸ்டின் லங்கர் ( Justin Langer) நியமிக்கப்பட்டுள்ளார். பந்து சேதப்படுத்திய விவகாரத்தினால் நிலைகுழைந்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் தோற்றப்பாடு மற்றும் கலாசாரத்தில் அழுக்குகளை நீக்கும் நோக்கில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெஸ்ட் அணித்தலைவர் டிம் பெயின் (Tim Paine) மற்றும் இன்னும் தெரிவு செய்யப்படாத மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணித்தலைவருடன் இணைந்து ஜஸ்டின் லங்கர் பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார். டாரன் லேமன் (Darren Lehmann) க்கு பதிலாக ஜஸ்டின் லங்கர் 4 வருடகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.