WhatsApp இன் இணை நிறுவனர் பதவி விலகுகிறார்

WhatsApp இன் இணை நிறுவனர் பதவி விலகுகிறார்

WhatsApp இன் இணை நிறுவனர் பதவி விலகுகிறார்

எழுத்தாளர் Bella Dalima

02 May, 2018 | 5:01 pm

பேஸ்புக் விவகாரத்தில் தனது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை என்பதால் WhatsApp இன் இணை நிறுவனர் பதவியில் இருந்து விலகுவதாக ஜேன் கோயம் (Jan Koum) அறிவித்துள்ளார்.

WhatsApp இன் இணை நிறுவனராக உக்ரைனைச் சேர்ந்த ஜேன் கோயம் பதவி வகித்து வருகிறார்.

இவர் பேஸ்புக் விவகாரத்தில் தனது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை என தெரிவித்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் துணை நிறுவனமாக WhatsApp உள்ளது.

WhatsApp 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனை 2014 ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்