T20 தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை

T20 தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை

by Bella Dalima 02-05-2018 | 7:17 PM
Colombo (News 1st)  சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8 ஆம் இடத்தில் இருந்த இலங்கை அணி 9 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 87 புள்ளிகளுடன் 8 ஆம் இடத்திற்கு முன்னேறியதால் இலங்கைக்கு இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் முதலிடத்தை வகிப்பதுடன், அவுஸ்திரேலியா இரண்டாமிடத்திலும், இந்தியா மூன்றாமிடத்திலும் உள்ளன.