தமிழகத்தில் கடும் வெப்பம்

தமிழகத்தில் கடும் வெப்பம்

by Staff Writer 02-05-2018 | 9:15 AM
தமிழக கடும் வெப்பத்துடனான வானிலை நிலவி வருகின்றது. வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், கரூர், மதுரை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று வழமையை விடவும் 2 முதல் 3 பாகை வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருத்தணி, வேலூர் உட்பட 11 இடங்களில் 100 பாகை பெரனைட்டை தாண்டி வெப்பம் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தில் நேற்று (01) அதிகபட்சமாக திருத்தணியில் 108.68 பெரனைட் வெப்பம் பதிவானது.