கொட்டில்கள் அமைத்து குடியேறும் இரணைத்தீவு மக்கள்

சொந்தக் காணிகளில் கொட்டில்கள் அமைத்து குடியேறி வரும் இரணைத்தீவு மக்கள்

by Bella Dalima 02-05-2018 | 9:58 PM
Colombo (News 1st)  கிளிநொச்சி - இரணைத்தீவு மக்கள் 366 நாளாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தையடுத்து நேற்று (01) முதல் தங்களின் காணிகளில் கொட்டில்கள் அமைத்துக் குடியேறி வருகின்றனர். இரணைத்தீவு கரையோர பகுதிகளில் உள்ள காணிகளிலேயே இவ்வாறு மக்கள் கொட்டில்கள் அமைத்து குடியேறி வருவதாக நியூஸ்ஃபெஸ்ட் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு குடியேறி வருவதுடன், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காகவே இந்த நடிவடிக்கையை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டனர். இதேவேளை, இரணைத்தீவு மக்கள் இன்று யாழ். மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். தங்களின் காணிகளில் தாங்கள் சுதந்திரமாகக் குடியேறுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தே மக்கள் யாழ். மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.