Colombo (News 1st)
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
2013 ஆம் ஆண்டிற்கு பின்னர் இங்கிலாந்து முதலிடத்திற்கு முன்னேறிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டது.
தென்னாபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை இவ்வருட ஆரம்பத்தில் கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியிருந்தது.
இந்தியாவை மூன்று புள்ளிகளால் முந்திய இங்கிலாந்து , ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
புதிய தரவரிசையின் படி தென்னாபிரிக்கா மூன்றாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் முறையே 4 ஆம், 5 ஆம் இடங்களைப் பெற்றுள்ளன.
பாகிஸ்தான் 6 ஆம் இடத்தில் நீடிப்பதோடு , பங்களாதேஷ் 7 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அணி 8 ஆம் இடத்தில் நீடிக்கிறது.
இதேவேளை ஆப்கானிஸ்தான் அணி பத்தாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி முதல் 10 இடங்களுக்குள் முன்னேறிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
