புனித சின்னங்கள் மீண்டும் அந்தந்த விகாரைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன

புனித சின்னங்கள் மீண்டும் அந்தந்த விகாரைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன

புனித சின்னங்கள் மீண்டும் அந்தந்த விகாரைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன

எழுத்தாளர் Bella Dalima

02 May, 2018 | 8:35 pm

Colombo (News 1st) 

சிரச யூனியன் அஷூரன்ஸ் வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்த பெருமானின் புனித சின்னங்கள் இன்று மீண்டும் அந்தந்த விகாரைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

கொழும்பு 2, பிரேப்ரூக் பிளேஸில் உள்ள சிரச தலைமை அலுவலக வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற சிரச யூனியன் அஷூரன்ஸ் வெசாக் வலயத்தில் நேற்று (01) நள்ளிரவிற்குப் பிறகும் பெருந்திரளான மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இன்று காலை நடைபெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர் புத்த பெருமானின் புனித சின்னங்களும் மஹிந்த தேரரின் புனித சின்னங்களும் மீண்டும் கொண்டு செல்லப்பட்டன.

புனித சின்னங்கள் மிஹிந்தலை ரஜமகா விகாரை, காலி பரமான்த ரஜமகா விகாரை மற்றும் திஸ்ஸமகாராம ரஜமகா விகாரைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இதேவேளை, மருதானை மகாபோதி அக்ரஷாவக்க விகாரையில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் பிரதம சீடர்களான சரியுத், முகலன் ஆகியோரின் புனித சின்னங்கள் இன்று மீண்டும் அந்த விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்