by Bella Dalima 01-05-2018 | 8:25 PM
2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர் நடைபெறவுள்ள Rostov-on-Don நகரிலுள்ள Rostov மைதானத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன.
மைதானம் திறந்து வைக்கப்பட்டு இங்கு ரஷ்ய பிரீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடர் நடத்தப்படுகின்றது.
மைதானத்தில் இடம்பெறும் முதல் போட்டியை கண்டுகளிக்க பெருந்திரளான ரசிகர்கள் வருகை தந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 45,000 ரசிகர்கள் போட்டியை கண்டுகளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.