ட்விட்டரும் வாடிக்கையாளர் விபரங்களை விற்றதா?

ட்விட்டரும் வாடிக்கையாளர் விபரங்களை விற்றதா?

by Bella Dalima 01-05-2018 | 4:04 PM
ஃபேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனமும் வாடிக்கையாளர்களின் அந்தரங்க தகவல்களை கசிய விட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தை போலவே ட்விட்டரும் தமது நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களின் விபரங்களை விற்றதாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அதிகாரி அலெக்சாண்டர் கோகன் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2015 ஏப்ரல் மாதம் வரை ட்விட்டர் நிறுவனம் தமது பயனாளர்களின் பதிவுகள் பெயர், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவிற்கு வழங்கியதாக அவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ந்து போன ட்விட்டர் நிறுவனம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. விளம்பரம் தொடர்பான பணிகளில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவுடன் சில விபரங்களை பகிர்ந்து கொண்டதாகவும், தனிப்பட்ட உரிமை தொடர்பான விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் ட்விட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அத்துடன், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தை விளம்பரதாரர் பட்டியலில் இருந்து ட்விட்டர் நீக்கியுள்ளது.