டெஸ்ட்  தரவரிசை: இந்தியா தொடர்ந்தும் முதலிடம்

டெஸ்ட் தரவரிசை: இந்தியா தொடர்ந்தும் முதலிடம், 6 ஆம் இடத்தில் இலங்கை

by Bella Dalima 01-05-2018 | 5:51 PM
Colombo (News 1st)  சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் 125 புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டது. 112 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா இரண்டாமிடத்தில் உள்ளது. மூன்றாமிடத்தில் இருந்த நியூசிலாந்து நான்காமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதோடு ,106 புள்ளிகளோடு அவுஸ்திரேலியா மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து ஐந்தாமிடத்திலும், இலங்கை அணி ஆறாமிடத்திலும் உள்ளன. 75 புள்ளிகளோடு பங்களாதேஷ் 8 ஆம் இடத்தைப் பெற்றுள்ளதுடன், மேற்கிந்தியத்தீவுகள் 9 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் மேற்கிந்தியத்தீவுகள் 9 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.