வெசாக் வலயத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகை

சிரச - யூனியன் அஷூரன்ஸ் வெசாக் வலயத்திற்கு பெருந்திரளான மக்கள் வருகை

by Bella Dalima 01-05-2018 | 9:58 PM
Colombo (News 1st)  மூன்றாவது நாளாகவும் இடம்பெறும் சிரச - யூனியன் அஷூரன்ஸ் வெசாக் வலயத்திற்கு பெருந்திரளான மக்கள் வந்த வண்ணமுள்ளனர். வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புத்த பெருமான் மற்றும் அவரின் சீடர்களின் புனித சின்னங்களை வழிபடுவதற்கான இறுதி நாள் இன்றாகும். புத்தபெருமானின் புனித சின்னங்கள், மஹிந்த தேரரின் புனித சின்னங்களை வழிபடுவதற்காக இன்று காலை முதல் பெருந்திரளான மக்கள் சிரச - யூனியன் யூனியன் அஷூரன்ஸ் வெசாக் வலயத்திற்கு வருகை தருகின்றனர். சமய வழிபாடுகளின் பின்னர் மூன்றாவது நாளாகவும் இன்று புனித சின்னங்களை வழிபடுவதற்காக சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட்டது. மிஹிந்தலை ரஜமகா விகாரையிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் புனித சின்னங்கள் மற்றும் மகிந்த தேரரின் புனித சின்னங்களை வழிபடுவதற்கும் சிரச யூனியன் அஷூரன்ஸ் வெசாக் வலயத்தில் மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மருதானை அக்ரஷாவக்க விகாரையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள புத்த பெருமானின் சீடர்களான சரியுத், முகலன் ஆகியோரின் புனித சின்னங்களும் வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டில் தாய்லாந்தில் சூலாலங்கார அரசினால் காலி ஶ்ரீ பரமானந்த ரஜ மகா விகாரைக்கு வழங்கப்பட்ட புனித சின்னங்களும் சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வொசக் வலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நலன்கருதி அன்னதானம் வழங்கப்படுகின்றது. ஜாதகக் கதைகளை எடுத்தியம்பும் வெசாக் அலங்காரப் பந்தலும் சிரச யூனியன் அஷூரன்ஸ் வெசாக் வலயத்தில் மக்கள் பார்வைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல கலையம்சங்கள் அடங்கிய பெரஹரா நேற்று இரவு வீதி வலம் வந்ததுடன் இன்றிரவும் அந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. அத்துடன், சிரச FM ஏற்பாடு செய்துள்ள பக்தி கீத போட்டியின் இறுதிக்கட்டம் இன்றும் நாளையும் இடம்பெறுகின்றது.