வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2018 | 1:23 pm

COLOMBO (News 1st) வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகியதுடன் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

உளவியல் பாடத்தில் பட்டம் பெற்ற தங்களைப் புறக்கணித்து பொருத்தமில்லாத வேறு துறைகளில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு வட மாகாண கல்வியமைச்சு முயற்சிப்பதாக தெரிவித்து வட மாகாண உளவியல் பட்டதாரிகள் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்