ராஜேஸ்வரி ராசய்யா லியோன் காலமானார்

ராஜேஸ்வரி ராசய்யா லியோன் காலமானார்

ராஜேஸ்வரி ராசய்யா லியோன் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

01 May, 2018 | 9:00 am

COLOMBO (News 1st) மறைந்த ராஜேஸ்வரி ராசய்யா லியோனின் இறுதிக்கிரியைகள் புதன் கிழமை இடம்பெறவுள்ளன.

உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி ராசய்யா லியோன் கடந்த சனிக் கிழமை (28) தனது 78 ஆவது வயதில் காலமானார்.

மறைந்த பஸ்தியான்பிள்ளை மற்றும் நேசம்மா தம்பதியருக்கு 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ராஜேஸ்வரி ராசய்யா லியோன் பிறந்தார்.

ராஜேஸ்வரி ராசய்யா லியோன் காலஞ்சென்ற சவரிமுத்து ராசய்யா லியோனுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

இவர் இன்பராஜ் லியோன் , ரஞ்சித் லியோன் , யோகராஜ் லியோன் மறைந்த உதயராஜ் லியோன் மற்றும் செல்வகுமாரி ஆகியோரின் தாயுமாவார்.

ரஞ்சித் லியோன் லிபோரா குழுமத்தின் பங்குதாரர் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக பொரளை ரேய்மண்ட் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியைகள் புதன் கிழமை மாலை 4 மணிக்கு பொரளை மயானத்தில் இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்