பணத்தை விட நல்ல படங்கள் தான் எனக்கு முக்கியம்: அதிதி

பணத்தை விட நல்ல படங்கள் தான் எனக்கு முக்கியம்: அதிதி

பணத்தை விட நல்ல படங்கள் தான் எனக்கு முக்கியம்: அதிதி

எழுத்தாளர் Bella Dalima

01 May, 2018 | 4:38 pm

காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார் அதிதி ராவ் ஹைதரி.

தெலுங்கிலும் அவர் அறிமுகமாக உள்ளார்.

சம்மோஹனம் படத்தில் சுதிர் பாபு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ஜூன் 15 ஆம் திகதி வௌியாகவுள்ளது.

இந்நிலையில், தனது சம்பளத்தை அதிகரித்து விட்டதாக வௌியான தகவலுக்கு அவர் பின்வருமாறு பதிலளித்துள்ளார்.

எனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக சிலர் தகவல் பரப்புகிறார்கள். இது பற்றி மற்றவர்கள் எதற்கு கவலைப்படுகிறார்கள் என தெரியவில்லை. அது பற்றி எனது தயாரிப்பாளர்கள் தானே கவலைப்பட வேண்டும். பணத்தை விட நல்ல படங்கள் தான் எனக்கு முக்கியம். கவர்ச்சி வேடங்கள் எனக்கு பொருந்தாது. பாலிவுட்டில் கூட நான் கவர்ச்சியான வேடங்களில் நடித்ததில்லை. மாடர்ன் உடைகளில் நடித்தாலும் எனது கேரக்டர் ஹோம்லியாகத்தான் பெரும்பாலான படங்களில் இருக்கும். அப்படி நடிப்பதே பிடிக்கும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்