சுமார் 600 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

சுமார் 600 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

சுமார் 600 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2018 | 4:32 pm

Colombo (News 1st) 

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 600 பேர் பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

எல்பிட்டிய, பலப்பிட்டிய, கம்புறுப்பிட்டிய, தங்காலை, மற்றும் வலஸ்முல்ல பகுதிகளில் நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 37 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்தார்.