லெஸ்டர்ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் 2ம் திகதி

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகளை அரச அனுசரணையில் நடத்த ஏற்பாடு

by Staff Writer 30-04-2018 | 2:29 PM
COLOMBO (News 1st) காலஞ்சென்ற இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகளை பூரண அரச அனுசரணையுடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் அரச அனுசரணையுடன் எதிர்வரும் 2 ஆம் திகதி சுதந்திர சதுர்க்கத்தில் நடைபெறவுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த ​அன்னார், நேற்றிரவு காலமானார். அன்னாரின் பூதவுடல் இன்று கொழும்பு 5, திம்பிரிகஸ்யாய லெஸ்ட்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையிலுள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. 1919 இல் பிறந்த கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஒரு பத்திரிகையாளராக செயற்பட்டு பின்னர் திரைத்துறையில் பிரவேசித்தார். 1956 இல் இவரது முதலாவது திரைப்படமான ரேகாவ திரைப்படம் வெளியாகியது. 2003 டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. https://www.youtube.com/watch?v=DRvvmnIZkiY