சிரச வெசாக் வலயத்தின் இரண்டாம் நாள் இன்று

சிரச வெசாக் வலயத்தின் இரண்டாம் நாள் இன்று

சிரச வெசாக் வலயத்தின் இரண்டாம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2018 | 2:40 pm

COLOMBO (News 1st) சிரச – யூனியன் அஷ்யூரன்ஸ் வெசாக் வலயத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.

கொழும்பு 2 பிறேபூறூக் ப்ளேஸில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைமையக வளாகத்தில் சிரச – யூனியன் அஷ்யூரன்ஸ் வெசாக் வலயம் அமைந்துள்ளது.

மூன்று விகாரைகளிலிருந்து கொழும்பிற்கு கொண்டுவரப்பட்ட புனித சின்னங்கள் சிரச, யூனியன் அஷ்யூரன்ஸ்
வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

புனித சின்னங்களை வழிபடுவதற்கான சந்தர்ப்பம் இன்றும் நாளையும் மக்களுக்கு கிட்டவுள்ளது.

அத்துடன் சிரச, யூனியன் அஷ்யூரன்ஸ் வெசாக் வலயத்தினை முன்னிட்டு இராஜகிரியே அரிஞான தேரரரின் சிரச எப்.எம். பன்சில் மலுவ விசேட தர்ம உபதேசம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்