இளவரசர் ஹரி திருமணத்தில் பங்கேற்க பிரியங்காவிற்கு அழைப்பு

இளவரசர் ஹரி திருமணத்தில் பங்கேற்க பிரியங்காவிற்கு அழைப்பு

இளவரசர் ஹரி திருமணத்தில் பங்கேற்க பிரியங்காவிற்கு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Apr, 2018 | 4:25 pm

COLOMBO (News 1st) இங்கிலாந்து இளவரசர் ஹரி திருமணத்தில் பங்கேற்க இந்தி பட முன்னணி நாயகி பிரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தி பட நாயகி பிரியங்கா சோப்ரா ஆங்கில டி.வி.தொடர்களிலும், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய நெருங்கிய தோழி மாடல் அழகி மெர்கல். இவரை இங்கிலாந்து இளவரசர் ஹரி தீவிரமாக காதலித்து வந்தார்.

உலகம் முழுவதும் இருந்து இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள 600 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். மணப்பெண் மெர்க்கலின் நெருங்கிய தோழி என்பதால் பிரியங்காவுக்கும் இந்த அழைப்பு அனுப்பப்பட்டு இருக்கிறது. இவர் மணப்பெண்ணின் தோழியாகவும் இருப்பார் என்று தகவல் வெளியானது.

இது குறித்து கூறியுள்ள பிரியங்கா சோப்ரா, “மெர்கல் எனது நெருங்கிய தோழி. அவர் திருமண பந்தத்தில் இணையப்போவது மகிழ்ச்சியை அளிக்கிறது. திருமணத்துக்கு பிறகு அவருடைய வாழ்க்கை முற்றிலும் மாறப் போகிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். மணப்பெண்ணின் தோழியாக நான் இருப்பேன் என்ற தகவல் சரியல்ல. அவருடைய ஒரு தோழியாக திருமணத்தில் நான் கலந்து கொள்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்