முருகன் விடுவிப்பு

கையடக்கத் தொலைபேசி பயன்படுத்திய குற்றச்சாட்டு: முருகன் விடுவிப்பு

by Staff Writer 29-04-2018 | 5:11 PM
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்திய குற்றச்சாட்டில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி, வேலூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள முருகனின் அறையிலிருந்து 2 கையடக்கத் தொலைபேசிகள், 2 சிம்கார்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு கடந்த ஒரு வருடமாக இடம்பெற்றதை அடுத்து நேற்று (28) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முருகன் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி, அவரை விடுதலை செய்துள்ளார். கையடக்கத் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டு காரணமாக, முருகன் தனது மனைவியை பார்வையிடுவதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.