தொடரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணி

தொடரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள்

by Staff Writer 29-04-2018 | 9:05 PM
COLOMBO (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரசிங்க தெரிவிக்கின்றார் ருவன் விஜேயவர்தத்ன குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக கட்சியின் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மற்றும் அது குறித்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அடிப்படையாக வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த அறிக்கையை விடுத்துள்ளார். நவீன் திசாநாயக்க , அகில விராஜ் காரியவசம், ஹரின் பெர்ணான்டோ, ஹர்ச டி சில்வா மற்றும் அஜித் பி .பெரேரா ஆகியோர் கட்சியின் சுமையை பொறுப்பேற்பதற்கு புதிதாக இணைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய தலைவர்களை உருவாக்கும் நோக்கில் அதற்கான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அவர்கள் பிரதித் தலைவர் மற்றும் உப தலைவருடன் இணைந்து புதிய பிரவேசத்துடன் வெற்றிப்பாதை நோக்கி பயணிப்பதற்கான அடித்தளம் இடப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதித் தலைவருக்கு புதிய பல பொறுப்புகளை வழங்குவதற்கும் கட்சி அமைப்பாளர்களை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதற்கான சிறந்த அடித்தளம் இடப்படும் என அவர் மேலும் குறிப்பிடடுள்ளார். கட்சியின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் விடயத்திற்கு பொறுப்பான செயலாளர் மற்றும் உதவி செயலாளர் பதவிகளை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் மேலும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய பொறுப்புகளை வழங்கவுள்ளதாகவும் பிரதமர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=uQrxv8-voE0