by Staff Writer 29-04-2018 | 4:30 PM
COLOMBO (News 1st) வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதானசாலைகளை, சோதனையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 2625 அன்னதான சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
அன்னதானசாலைகளை சோதனையிடுவதற்கு 2,500 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
உரிய சுகாதார பாதுகாப்பு முறையின் கீழ் அன்னதானங்களை ஏற்பாடு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
உரிய நடைமுறைகளை பின்பற்ற தவறும் ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.