இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டனின் மூன்றாவது குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது

இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டனின் மூன்றாவது குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது

இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டனின் மூன்றாவது குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

28 Apr, 2018 | 6:28 pm

இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியரின் 3 ஆவது குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் இளவரசர் சார்லஸ் – அமரர் டயானா தம்பதியினரின் மூத்த மகனான இளவரசர் வில்லியமிங்கும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கும் ஏற்கனவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மூன்றாவதாக இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

இது குறித்து பிரிட்டன் அரச குடும்பத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஏப்ரல் 23 ஆம் திகதி, பிரிட்டன் நேரப்படி காலை 11.01 மணிக்கு கேட் மிடில்டனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அதன் எடை 8 பவுண்ட் 7 அவுன்ஸ் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்படும் என கேள்வி இங்கிலாந்து மக்களிடையே எழுந்தது.

ஆல்பர்ட் என பெயர் வைக்கப்படும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், குழந்தைக்கு பிரின்ஸ் லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

மேலும், குழந்தை ஹிஸ் ராயல் ஹைனஸ் பிரின்ஸ் லூயிஸ் ஆப் கேம்பிரிட்ஜ் என்றே அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

புதிதாக பிறந்த குட்டி இளவரசருக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின், மிட்சேல் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்