கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக Yes FM இன் அலைவரிசை பிரதானி ரம்சி காசிம் தெரிவு

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக Yes FM இன் அலைவரிசை பிரதானி ரம்சி காசிம் தெரிவு

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக Yes FM இன் அலைவரிசை பிரதானி ரம்சி காசிம் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2018 | 6:37 pm

Colombo (News 1st)

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிறைவேற்று அதிகாரியாக Yes FM இன் அலைவரிசை பிரதானி ரம்சி காசிம் தெரிவு செய்யப்பட்டார்.

கெபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 41ஆவது வருடாந்த மீளாய்வுக் கூட்டம் இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நடைபெற்றது.

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீட் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மதத் தலைவர்கள், அதிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பல நிறுவனங்கள் ஊடாக, பல்வேறு துறைகளில் இலங்கை மக்களுக்காக சேவையாற்றிய நிறைவேற்று அதிகாரிகளை கௌரவிப்பதற்காக வருடாந்தம் இந்த நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 5 நிறைவேற்று அதிகாரிகள் இம்முறையும் கௌரவிக்கப்பட்டனர்.

2017 – 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிறைவேற்று அதிகாரியை தெரிவு செய்வதற்காக ஐவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

01. PE+ இன் கமல் குமார
02. சக்தி க்ளோபல் டிவியின் கே.சமந்த் ராஞ்ச்
03. S-lon நிறுவனத்தின் சனத் ஷமின்த்ர பண்டார
04. MBC-இன் ரம்ஸி காசிம்
05. AF Jones இன் ஷமீர் ரசூல்டீன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் வருடத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக YES FM மின் அலைவரிசை பிரதானி ரம்ஸி காசிம் தெரிவு செய்யப்பட்டார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்