பாதுகாப்பற்ற பகுதிகளில் 2000 குடும்பங்கள்

தலைநகரில் பாதுகாப்பற்ற பகுதிகளில் 2000-இற்கும் அதிகமான குடும்பங்கள் வசிப்பதாக தகவல்

by Bella Dalima 27-04-2018 | 5:41 PM
Colombo (News 1st)  கொழும்பு நகரில் பாதுகாப்பற்ற பகுதிகளில் 2000-இற்கும் அதிகமான குடும்பங்கள் வசிப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொலன்னாவ முதல் கொழும்பு துறைமுகத்திற்கு எரிபொருள் கொண்டு செல்லும் பிரதான குழாய் மார்க்கப் பகுதியில் சுமார் 600 குடும்பங்கள் வசிப்பதாக அதிகார சபையின் தலைவர் கலாநிதி ஜகத் முனசிங்க குறிப்பிட்டார். களனி வௌி ரயில் மார்க்கத்திற்கு அருகில் 300-இற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்கின்றன. இதேவேளை, கொம்பனித்தெரு ஸ்டுவர்ட் வீதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு இடிந்து வீழும் அபாயமுள்ளதால், அங்கு வசிக்கும் 150-க்கும் அதிகமான குடும்பங்களை அங்கிருந்து வௌியேற்றுமாறு, இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.