கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்றதாக மாற்ற இணக்கம்

கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்ற பிராந்தியமாக மாற்ற இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம்

by Bella Dalima 27-04-2018 | 3:56 PM
கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இரு தலைவர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் போது இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. கடந்த 1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொரிய யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமைக்கான சமாதான உடன்படிக்கையாகவும் இது காணப்படுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வட கொரியாவினால் போர்க்குணமிக்க சொல்லாடல் பயன்படுத்தப்பட்ட நிலையில், இத்தகைய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 65 ஆண்டுகளுக்கு பின்னர் கொரிய தலைவர்கள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை விசேட அம்சமாகும்.